Posted by : Author
Saturday, 6 August 2016
அழகை பொறுத்தவரையில் பொதுவாக இன்றைய பெண்களுக்கு இருக்கும் பிரச்னை கருவளையம்.
இந்த கருவளையம் பொதுவாக வேலைச்சுமை மற்றும் போதுமான தூக்கம் இல்லாததால் வருகின்றது.
இதனால் இளம் வயதிலேயே முதுமையான தோற்றத்தை தருகிறது, இதனை போக்க சூப்பரான டிப்ஸ்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை அரைத்து அதனுடைய சாற்றினை எடுத்து காட்டனில் நனைத்து அதனை கண்களைச் சுற்றி தடவி, பத்து நிமிடத்திற்கு பிறகு கண்களை குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும்.
எலுமிச்சை மற்றும் தக்காளி
எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாறு இடண்டையும் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால் கருவளையங்கள் குறைந்து விடும்.
வெள்ளரிக்காய் மற்றும் தயிர்
தயிர் மற்றும் நைசாக அரைத்த வெள்ளரிக்காயை தலா ஒரு ஸ்பூன் எடுத்து, அதில் அரை ஸ்பூன் எலுமிச்சைசாறு கலந்து, கருவளையம் உள்ள இடத்தில் தடவி வர குணமாகும்.
ஜாதிக்காய்
ஜாதிக்காயை அரைத்து கண்களைச் சுற்றி, தடவிக் கொண்டு சிறிது நேரத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் கருவளையம் மறைந்துப் போகும்.
பால் பவுடர்
பால் பவுடரை தண்ணீர் அல்லது பன்னீரில் கரைத்து, அதில் ஒரு துணியை நனைத்து கண்களை சுற்றிப் பூசலாம்.
அதேபோல் பாலாடையுடன் வெள்ளரிக்காய் சாறு கலந்தும் தடவலாம். இவை நன்கு காயும் வரை வைத்திருக்காமல் சிறிது ஈரமாக இருக்கும் போதே கழுவ வேண்டும்.
Related Posts :
- Back to Home »
- அழகுக்கு குறிப்புகள் »
- கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க வேண்டுமா?

