Posted by : Author Thursday, 28 July 2016


கூந்தலின் மிக முக்கிய எதிரி பொடுகு. தலையில் அரிப்பையும், செதில் செதிலாக உதிர்ந்து ஒருவித தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும்.

குளிர் காலத்தில் பொடுகுத் தொல்லை அதிகம் ஏற்படும். இதற்குக் காரணம் கண்ணுக்குத் தெரியாத ஒருவித நுண்ணுயிர்களே.

மேலும் மன அழுத்தம், ஊட்டச் சத்துக் குறைபாடும் பொடுகு ஏற்பட காரணமாகும்.

எனவே ஆரோக்கியமான உணவு உட்கொண்டால் பொடுகை தவிர்க்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

பாசிப்பயறு, தயிர்

பாசிப்பயிறு மாவு மற்றும் தயிர் கலந்து தலையில் ஊறவைத்து பின்னர் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்

கற்றாழை

கற்றாழை சாற்றை தலையில் மேல் தோலில் தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

வெந்தயம்

வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும். தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்னை நீங்கும்.

பால்

மிளகுதூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

தேங்காய் பால்

தேங்காயை அரைத்து பால் எடுத்து அதை தலையில் நன்றாக தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு மறைந்துவிடும், கூந்தல் பளபளக்கும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -