Posted by : Author Tuesday, 28 June 2016


மூளை காயங்களின் தாக்கத்தில் ஆண், பெண்களிடையே பாரிய வேறுபாடு காணப்படுகின்றது.

பொதுவாக ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டாலும், இறப்பு பெண்களிலேயே அதிகம் இடம்பெறுவதாக வைத்தியர்கள் கூறுகின்றார்கள்.

கடந்த 2010 தை - பங்குனி காலப்பகுதியில் பெங்களுர் தேசிய மனநலம் மற்றும் நரம்பு அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்ட 1,627 நோயாளர்களில் 20 வீதமானவர்கள் (293 பேர்) பெண்கள். அதில் 3.4 வீதமானவர்கள் இறந்துள்ளனர்.

அனுமதிக்கப்பட்ட 1,334 ஆண்களில் 1.6 வீதமானவர்கள் (22 பேர்) இறந்துள்ளனர். அதேநேரம் ஆண்களை விட பெண்களில் காயங்கள் சிறிய அளவிலேயே காணப்பட்டமையும் அவதானிக்கப்கட்டிருக்கிறது.

மேற்படி ஆய்வு லண்டன், பிரான்ஸ், ஸ்கொட்லாந்து போன்ற நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அவ் இடங்களிலும் இதன் விளைவு ஆண், பெண் பாலாருக்கிடையில் வேறுபட்டிருந்தமை இனங்காணப்பட்டது.

அத்துடன் 60 வயதுக்கும் மேலானோரில் இதன் விளைவு அதிகம் எனவும், பெண்களில் கிட்டத்தட்ட ஆண்களை விட இரு மடங்கு எனவும் சொல்லப்படுகிறது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -