Posted by : Author Tuesday, 28 June 2016


புதிய ஆய்விலிருந்து புரோபயோட்டிக்ஸ் (Probiotics) களுக்கு மார்பகப் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Dr Gregor Reid, நுண்ணுயிரியல் பேராசிரியர் இதுபற்றி கூறுகையில், பெண்ணின் மார்ப்பகத்திலுள்ள சிலவகை பக்ரீரியாக்கள் மார்பக புற்றுநோயை தூண்டுகின்றன.

அதேநேரம் ஆரோக்கியமான பெண்ணின் மார்ப்பக பகுதிகளில் நன்மை பயக்கும் பக்ரீரியாக்களின் அளவும் அதிகமாக உள்ளது.

இது பற்றி முன்னைய ஆய்வில் புரோபயோட்டிக்ஸ் பற்றிய ஆய்வுகள் மார்பகப் புற்றுநோய்க்கெதிராக விடையளிக்கலாம் என அமெரிக்க ஆய்வாளர்களால் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

தற்போதைய ஆய்வில் 58 பெண்களின் மரர்பக இழையங்கள் பெறப்பட்டிருந்தது.

அதில் 45 பேர் மார்ப்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர், 23 பேர் ஆரோக்கியமானவர்கள்.

இவ் ஆய்வில் மார்பகப் புற்றுநோயானது Escherichia coli, Staphylococcus பக்ரீய எண்ணிக்கை அதிகமானோரில் அதன் தாக்கம் அதிகளவில் இருப்பது அவதானிக்கப்பட்டது.

இவ்வகை பக்ரீரியாக்கள் DNA இன் இரட்டை இழையை உடைக்கின்றன. அதனால் அவற்றில் தவறுகளை ஏற்படுத்தி மார்ப்பக புற்றுநோய்க்கு காரணமாகின்றன.

அதேநேரம் ஆரோக்கியமான பெண்ணின் மார்பக இழையங்களில் Lactobacillus, Streptococcus போன்ற இனங்கள் அதிகளவில் இருப்பது அவதானிக்கப்பட்டது.

இவ் இனங்கள் புற்றுநோய் எதிர்ப்பு பக்ரீரியாக்கள் ஆகும்.

இதன் மூலம் நன்மை பயக்கும் பக்ரீரியாக்களை Probiotics மூலம் அதிகரித்து மார்பகப் புற்றுநோயை கட்டுப்படுத்த முடியும் என Reid சொல்கிறார்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -