Posted by : NEWMANNAR Tuesday, 5 April 2016

உலகை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி இருக்கும் புற்றுநோய், வாழ்க்கை மற்றும் உணவு முறை மாற்றத்தின் மோசமான பிரதிபலிப்பாகும். புற்றுநோயை குறித்த தவறான நம்பிக்கைகள் நிலவி வருகிறது. அவற்றை தெரிந்து கொள்வது, புற்றுநோய்க்கு எதிராக நம்மைக் காத்துக் கொள்ள உதவும்.

புற்றுநோய் பற்றி நிலவும் சில தவறான நம்பிக்கைகளும், சரியான விளக்கங்களும்:

புகைபிடிப்பவர்களுக்கு மட்டுமே நுரையீரல் புற்றுநோய் வரும் என்பது தவறான கருத்து. புகை பழக்கம், பேஸிவ் ஸ்மோக்கிங் என இந்த இரண்டுமே புற்றுநோயை உண்டாக்கும். மேலும் ஆஸ்பெஸ்டாஸ் வாயு, ஆர்செனிக் வாயு ஆகியவையும் புற்றுநோயை ஏற்படுத்தும்.

அசாதாரணமாக ஏற்படும் கட்டிகள் அனைத்தும் புற்றுநோய் என நினைப்பது தவறு. கொழுப்புக்கட்டிகள், உடல் சூட்டினால் ஏற்படும் கட்டிகள் என அதிக தீங்கு இல்லாத கட்டிகள் வர வாய்ப்புள்ளதால், உகந்த பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது.

ஃப்ளூரின் நிறைந்த குடிநீர் குடிப்பது புற்றுநோயை உண்டாக்கும் என்று பரவி வரும் கருத்து தவறானது. இது ஆதாரமற்றது. எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படாத கருத்தாகும்.

புற்றுநோயை தடுக்கும் வழி எதுவும் இல்லை என்பது தவறான கருத்தாகும். ஆரோக்கிய உணவுப்பழக்கம், உடற்பயிற்சி மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டில் இருந்து விடுபட்டு இருப்பது புற்றுநோய் வராமல் தடுக்கும் வழிகளாகும்.

புற்றுநோய் ஏற்பட்டால் காப்பாற்றவே முடியாது என்னும் அச்சமும் தேவையற்றது, தவறானது. ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்படும் புற்றுநோயை தகுந்த சிகிச்சை மற்றும் உணவு முறையில் குணப்படுத்தலாம். மேலும் புற்றுநோய் சிகிச்சையில் நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராது என்பது தவறான கருத்தாகும். மார்பகப் புற்றுநோய் உள்ளவர்களில் ஒரு சதவிகிதம் மட்டுமே ஆண்கள் என்றாலும், மார்பில் கட்டி போன்றவை தென்பட்டால், ஆண்கள் அலட்சியம் காட்டாமல் பரிசோதனை செய்துகொள்வது சிறந்தது.



Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -