Posted by : Author
Tuesday, 19 April 2016
வாழைப்பூ துவர்ப்பு தன்மை கொண்டது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு வர பிரசாதம் என்று கூட சொல்லும் அளவுக்கு சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் ஆற்றல் கொண்டது. ஹுமோகுலோபினை உயர்த்தும் சக்தி கொண்டது. இருதய நோய், புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் வாழைப்பூவுக்கு இருக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் அதிக ரத்தபோக்கு ஏற்படாமல் கட்டுபடுத்தும்.
வாயு தொல்லைக்கு, உடலில் அதிக உஷ்ணம் இருப்பதும் ஒரு காரணம். இதற்கு மருந்தும் வாழைப்பூதான். பித்தத்தால் ஏற்படும் தலை சுற்றல், வாந்தி போன்றவை நீங்கும். வயிற்று உப்பசம் குறையும். இரத்த மூல நோய் நீங்கும். கைக்காலில் ஏற்படும் எரிச்சல் நீங்கும். தோல் வியாதிகள், வயிற்றில் உள்ள பூச்சிகளால் ஏற்படும் தொல்லைகளும் நீங்கும்.
வாழைப்பூவில் நார்சத்து, கால்சியம், இரும்புசத்து, பொட்டாசியம், வைட்டமின் போன்ற பல சத்துக்கள் இருக்கிறது. வாழைப்பூவை பொரியலாகவும் அல்லது வடை செய்தும் சாப்பிடலாம். வாரத்திற்கு இரண்டு நாட்கள் உணவில் கண்டிப்பாக வழைப்பபூவை சேர்த்து கொண்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். கொடிய பாக்டீரியாக்களால் ஏற்படும்
தொல்லைகளை நீக்கும் ஆற்றல் வாழைப்பூவுக்கு உண்டு. அத்துடன் உடலில் இருக்கும் தீய பாக்டீரியாக்களை வளரவும் விடாது. அதனால், நல்ல ஆரோக்கியம் தரும் வாழைப்பூவை சஞ்சீவி பூ என்றும் சொல்லாம்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கிய வாழ்வு »
- உடல் நலம் காக்கும் சஞ்சீவி – வாழைப்பூ

