Posted by : Author Tuesday, 5 April 2016



பொதுவாக முகப்பருவானது சருமம் அதிக எண்ணெய் பசையுடன் இருந்தால் வரும். எனவே கோடையில் தான் முகப்பரு பிரச்சனை அதிகம் ஏற்படும். ஏனெனில் கோடையில் சருமம் எப்போதும் வியர்த்தவாறு இருப்பதால், சருமத்துளைகள் திறந்து, பாக்டீரியாக்கள் சருமத்துளைகளினுள் நுழைந்து, சருமத்தில் தொற்றுக்களை ஏற்படுத்தி, முகப்பருக்களை ஏற்படுத்தும்.

அதிலும் எண்ணெய் பசை சருமம் என்றால் அவர்களுக்கு சொல்லவே வேண்டாம். கோடைக்காலத்தில் அவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். அத்தகையவர்கள், கோடையில் சருமத்திற்கு ஒருசில பராமரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும். இதனால் கோடையில் முகப்பருக்களின் பிரச்சனையைத் தடுக்கலாம். சரி, இப்போது கோடையில் பருக்கள் வராமல் தடுக்கும் உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போம். முக்கியமாக இந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதோடு, அதனைக் கொண்டு சருமத்தையும் பராமரிக்க வேண்டும்.

எலுமிச்சை சாறு
எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மை, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்குவதோடு, அதில் உள்ள வைட்டமின் சி, பிம்பிள் மற்றும் இதர சரும பிரச்சனைகளை குணப்படுத்தும். எனவே எலுமிச்சையை ஜூஸ் போட்டு குடித்தோ, அல்லது எலுமிச்சை சாற்றில் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்தோ கழுவ வேண்டும்.



ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலில் அத்தியாவசிய ஃபேட்டி ஆசிட்டுகளான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இவை சருமத்தை இளமையுடனும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும். அதுமட்டுமின்றி, ஆலிவ் ஆயில் சருமத்துளைகளை சுத்தம் செய்து, பிம்பிள் வருவதைத் தடுக்கும். எனவே தினமும் ஆலிவ் ஆயிலைக் கொண்டு மசாஜ் செய்து வருவது நல்லது.

பூண்டு
பூண்டு கூட பிம்பிளைப் போக்கும். மேலும் பூண்டு உடலினுள் மட்டுமின்றி சருமத்தில் உள்ள பாக்டீரியா தொற்றுக்களை அழிக்கும். அதற்கு ஒரு பூண்டு பல்லை எடுத்து தட்டியோ அல்லது சாறு எடுத்தோ, பிம்பிள் மீது வைத்தால் பிம்பிள் உடனே நீங்கும்.

வால்நட்ஸ்
வால்நட்ஸ் சருமத்தை மென்மையாகவும், ஈரப்பசையுடனும், ஆரோக்கியமாகவும், இளமையுடனும் வைத்துக் கொள்ள உதவும். எனவே இதனை உணவில் சேர்த்துக் கொள்வதுடன், அதனை அரைத்து அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, சருமத்தை ஸ்கரப் செய்து வந்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.

தர்பூசணி
தர்பூசணி சருமத்தை புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியமாகவும், வறட்சியுடனும் வைத்துக் கொள்ளும். மேலும் இது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும். எனவே இதன் சாற்றினை முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வருவது, கோடையில் சருமத்திற்கு சிறந்த பாதுகாப்பை வழங்கும்.

தயிர்
பிம்பிளை நிரந்தரமாக நீக்க வேண்டுமா? அப்படியெனில் தயிர் மிகவும் சிறப்பான பொருள். இதனைப் பயன்படுத்தி சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். அதற்கு இதனை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதோடு, முகத்தில் தடவி மசாஜ் செய்து வர வேண்டும்.




Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -