Posted by : Author Friday, 29 April 2016


என்டோகிரினாலஜி என்கிற இந்திய மருத்து இதழில், 2013 ம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரையின்படி, 10 ல் ஒரு இந்தியர்கள் ஹைப்போ தைராய்டிசத்தால் பாதிக்கப்படுகின்றார்கள். நீங்கள் தைய்ராய்டு நோயால் பாதிக்கப்படுவதற்கு, உங்களுடைய மூதாதையர்களின் வரலாற்று பிண்ணணியும் ஒரு முக்கியக் காரணி.

இருப்பினும் உங்களின் ஒரு சில உடல் நிலைமைகளும் உங்களுக்கு தைராய்டு ஆபத்தை ஏற்படுத்தும் என பொது மருத்துவரான டாக்டர் ஆர்த்தி உல்லால் தெரிவிக்கின்றார். எனவே நாங்கள் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய உங்களின் முதல் ஐந்து உடல் நிலைகள் பற்றி இங்கே தெரிவித்துள்ளோம்.

தன் எதிர்பாற்றலை உற்பத்தி செய்யும் நோய்கள்
தைராய்டு பிரச்சனை ஏற்படுவதற்குரிய பொதுவான மற்றும் ஆபத்தான காரணிகளுள் ஒன்றாக, தன் எதிர்பாற்றலை உற்பத்தி செய்யும் (ஆட்டோ இம்யூன்) நோய்கள் உள்ளன. இந்த நோய்களின் காரணமாக உற்பத்தியாகும் ஆன்டிபாடிகள் தைராய்டு சுரப்பியை பாதித்து, தைராய்டு ஹார்மோன் உற்பத்தியை குறைத்து விடுகின்றது. பல்வேறு தன் எதிர்பாற்றலை உற்பத்தி செய்யும் நோய்களில், கிரேவ்ஸ், ஹாஸ்மிமோட்டோஸ் தைராய்டு அழற்சி போன்ற நோய்கள் மிகவும் முக்கியமானவை.

அயோடின் பற்றாக்குறை
அயோடின் பற்றாக்குறையான உணவுகள், தைராய்டு உற்பத்தி குறைவதற்குரிய மிக முக்கிய காரணியாக உள்ளது. பெரும்பாலான மக்கள் அயோடின் கலந்த உப்பை பயன்படுத்தி தொடங்கியுள்ளதன் காரணமாக, தைராய்டு பிரச்சனை குறைந்துவிட்டது. எனினும் அயோடின் உட்கொள்ளல் குறைந்த பகுதிகளில், இந்த ஆபத்து மிகவும் அதிகமாகவே இருக்கின்றது. எனவே, தைராய்டு அபாயத்தை குறைக்க அயோடின் கலந்த உப்பை தேர்வு செய்யுங்கள்.



முதல் வகை நீரிழிவு நோய்
இரண்டாம் வகை நீரிழிவு அல்லது இளம்பருவ நீரிழிவு வகை போல் அல்லாமல், முதல் வகை நீரிழிவு நோய், தன் எதிர்பாற்றலை உற்பத்தி செய்யும் நோய்களின் காரணமாக ஏற்படும் ஒரு பரம்பரை நோய். எனவே, இளம் பருவ நீரிழிவு நோயாளிகள், தன் எதிர்பாற்றலை உற்பத்தி செய்யும் நோய்களின் தாக்கத்தால் உருவான ஆன்டிபாடிகளின் காரணமாக, தைராய்டு நோயினால் பாதிக்கப்பட அதிக அளவு வாய்ப்புகள் உள்ளது.

மெனோபாஸ்
மெனோபாஸ் காலத்தில், உடலில் எண்ணற்ற ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக உங்களுடைய வயது 50 ஐ தொட்டு விட்டால், உங்களுக்கு தைராய்டு ஆபத்து அதிகரிக்கின்றது. மேலும், சில பெண்கள், கர்ப்பத்திற்கு பிறகு தற்காலிகமான தைராய்டு பிரச்சனையால் அவதிப்படுகின்றார்கள்.

பிட்யூட்டரி சுரப்பி
இது ஒரு மிகவும் பொதுவான காரணம் இல்லை என்றாலும், பிட்யூட்டரி சுரப்பியின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள், தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பை குறைக்கின்றன. ஏனெனில், பிட்யூட்டரி சுரப்பியானது DSH (தைராய்டு ஊக்குவிக்கும் ஹார்மோன்) ஐ சுரக்கின்றது. அதன் அளவு குறைவதன் மூலம் உங்களின் தைராய்டு ஆபத்து அதிகரிக்கும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -