Posted by : Author Monday, 25 April 2016


உங்க நுரையீரலை நீங்களே சுத்த‍ம் செய்வதற்கு அதிக நாட்கள் ஆகாது. மூன்றே மூன்று நாட்கள்தான் ஆகும். இந்த மூன்று நாட்களில் கண்டிப்பாக உங்கள் நுரையீரல் சுத்த‍மடை யும் என்று நம்பலாம்.

புகை பிடிப்பவர்கள் அல்லாமல் மற்றவர்களு க்கு அலர்ஜி, சுற்றுப்புற சூழ்நிலை, தூசுகளி னால் நுரையீரல் அழற்சி ஏற்படுவதுண்டு. அதே சமயம் 45 வருடமாக புகைபிடித்தாலும் எந்த பாதிப்பு இல்லாமல் நுரையீரல் நன்றாக இயங்குபவர்களும் உண்டு. இது ஆளாளுக்கு வித்தி யாசப்படலாம்.

எவ்வாறு இருப்பினும், இப்பொழுது மூன்று நாட்களில் நுரையீரல் சுத்தம் செய்வது என்று பார்ப்போம்.


✔ இதை செய்வதற்க்கு இரண்டு நாட்கள் முன்பே எல்லா பால் பொருட்கள் சாப்பிடுவ தை நிறுத்தி விட வேண்டும். உதாரணத்திற க்கு பால், தேநீர், தயிர், மோர், வெண்னெய், சீஸ் போன்றவை. உடலிருந்து நச்சுகளை நீக்கவேண்டியது அவசியம். எனவே தவறாது இதை கடைபிடிக்க வேண்டும்.

✔ சுத்தம் செய்வதற்க்கு முந்தைய நாள் இரவு ஒரு கப் மூலிகை தேநீரை குடிக்கவும். இது குடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும். சுத்தம் செய்ய நுரையீரலுக்கும், உடலுக்கும் ஒய்வு தேவை. எனவே கடுமையான பயிற்சிகள், வேலைகளை செய்ய வேண்டாம்.

முதல் நாள்:

✔ இரண்டு எலுமிச்சை பழங்களின் சாற்றை 300 மில்லி தண்ணீரில் கலந்து காலை உணவுக்கு முன்பு குடிக்கவும்.

✔ ஒரு மணி நேர இடைவெளிக்கு பிறகு 300 மில்லி சுத்தமான திராட்சைப் பழச் சாற்றை குடிக்கவும். இதன் சுவை பிடிக்காவிட்டால் திராட்சை பழச்சாற்றுக்குபதிலாக அன்னாசிபழச் சாற்றை குடிக்கலாம். எல்லாம் சுத்த மான தண்ணீர், சர்க்கரை கலக்காத சாறாகஇருக்கட்டும். இந்த சாறுகளில் இயற்கை யான சுவாசத்தை சீராக்கும் ஆன்டிஆக்ஸிடன்டஸ் நிறைந்துள்ள தால் நமது நுரையீரலுக்கு நன்மை பயக்கும்.

✔ மதிய உணவிறக்கு முன்பாக 300மில்லி சுத்தமான கேரட் சாற்றை பருகவும். இதில் தண்ணீரோ சர்க்கரையோ சேர்க்கக்கூடாது. கேரட்சாறு சுத்தம் செய்யும் மூன்று நாட் களும் இரத்தத்தை அமில நிலையிலிருந்து காரத் தன்மை க்கு மாற்றுகிறது.

✔ இரவு படுக்கபோகும் முன்பு 400 மில்லி பொட்டாசியம் நிறைந்த கிரேன் பெரி போன்ற சாற்றை குடிக்க வேண்டும். பொட்டாசியம் சுத்தம் செய்ய ஒருடானிக்காக உதவுகிறது. இதுஉடலின் உள்ளுறுப்புகளில் முக்கியமாகசிறுநீர்பாதை, நுரையீரல் தொற்றுகளை உண்டாக் கும் பாக்டீரியாக்களை நீக்குகின்றது. கிரேன் பெரி கிடைக்காதவர்கள் சுத்தமான சிகப்பு திராட்சை அல்லது பைனாப்பிள், ஆரஞ்சு சாற்றை கலப்பிடமி ல்லாமல்குடிக்கலாம்.

✔ இதை மூன்று நாட்கள் கடைபிடிக்கும் போது எளிதில் ஜீரணிக்ககூடிய உணவுகளை சாப்பிடவேண்டும். குறைந்தது 20நிமிடங்கள் உடற்பயிற்சிசெய்து வேர்வையைவெளி யேற்றவும். அல்லது 20நிமிடங்களில் சுடுதண்ணீரி ல் குளிக்கலாம். வியர்வை வெளியேறும் போது நச்சுகளும் வெளி யேறும்.

✔ இரவில் கொதிநீர் ஆவி பிடிக்கவேண்டும். 5 முதல் 10 சொட்டுவரை யூகாலிப்ட்டஸ் ஆயில் கொதிநீரில் சேர்த்து தலையினை சுத்தமான போர்வையைக்கொண்டு மூடி ஆவியை நன்றாக உள்ளுக்குள் இழுத்து சுவாசிக்கவும். இவ்வாறு கொதி நீர் ஆறும்வரை ஆவி பிடிக்கவும்.

✔ மூன்று நாட்கள் இவ்வாறு கடைபிடிக்கவும். ஆஸ்த்துமா, நுரையீரல் அழற்ச்சி, சைனஸ் தொல்லை உள்ளவர்களுக்கும் நல்பலனை அளிக்கும்.









Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -