Posted by : Author
Wednesday, 23 March 2016
சிலருக்கு தாங்கள் உடல் எடை குறைகிறோம் என்பதைக்கூட அறியாமல் இருப்பார்கள்.
உடல் எடை குறைவு எல்ல தாண்டியபின்னதா தான் என்ன பிரச்சனையோ என்ற அச்சத்தில் மருத்துவரை அணுகுவார்கள்.
சத்துக்குறைவு, ஏதேனும் நோய் தாக்கம் காரணத்தினாலேயே திடீரென உடல் எடை குறைகிறது என்பதை நினைவில் கொள்க.
உணவால் திடீரென உடல் எடை குறையாது.
திடீர் உடல் எடை குறைவிற்கான காரணம் என்ன?
1. பட்டினி, பசியின்மை, சத்துணவு இல்லாமை, வலி, கவலை, உறக்கமின்மை, அசதி என்கிற உணவு சார்ந்த காரணங்கள்.
2. விழுங்குவதில் ஏற்படும் சிரமங்கள், நாக்கு பாதிப்படைவது, தொண்டைக் கோளாறு, அழற்சி மற்றும் கட்டிகள்.
3. உணவுகளை கிரகிக்க முடியாத தன்மை, தொடர்ந்து வரும் வாந்தி, பேதி, குடல் அடைப்புகள்.
4. வயிற்றில் புற்றுக் கட்டிகள் இருந்தாலும் உடல் இளைத்துவிடும்.
5. அல்சர் குடல் அழற்சி, பூச்சிகள், குடல் காச நோய்.
6. கணையம், கல்லீரல், சார்ந்த கட்டிகள் கணைய அழற்சி, கல்லீரல் சுருங்கி விடுவது.
7. இதய உள்தசை அழற்சி, இதயச் செயல்பாட்டில் குறைபாடு.
8. பார்க்கின்சன் வியாதி, முற்றிய டேபஸ் வியாதி, சதை அழிவு நோய்கள்.
9. நீரிழிவு, தைராய்டு நச்சுத் தன்மை போன்ற நாளமில்லா சுரப்பி சார்ந்த வியாதிகள்.
10. ஊன்ம ஆக்கச் சிதைவு சார்ந்த பல்வேறு கட்டிகள் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு.
11. விட்டமின் குறிப்பாக வைட்டமின் பி குறைபாடு.
12. அடிபடுவது அல்லது அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் நைட்ரஜன் சீர் குறைவு.
13. காச நோய், நாள்பட்ட மலேரியா போன்ற தொற்று நோய்கள்.
14. ரத்தம் சார்ந்த வியாதிகளான லூக்கிமியா, ஏபிளாஸ்டிக் சோகை.
15. குடிப்பழக்கம், மருந்துகளுக்கு அடிமை, அதிகமாக புகைப்பிடிப்பது.

Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை சொல்லும் »
- திடீரென உடல் எடை குறைகிறதா? என்ன காரணமாக இருக்கலாம்!

