Posted by : Author Tuesday, 15 March 2016

 தற்போதைய அவசர யுகத்தில் ஒய்வு என்பதே இல்லாமல் உழைத்துக்கொண்டிருக்கிறோம். இதனால் மன அழுத்ததால் பெரிதும் பாதிக்கப்படுகிறோம்.
வேலை என்பது மட்டுமல்லாது உணவு பழக்கவழக்க முறை, சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது.

இத்தகைய மன அழுத்தம் பல்வேறு நோய்களுக்கு வழி வகுக்கும்.

எனவே மன அழுத்தத்தை எளிய முறையில் குறைக்கும் வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.

தியானம்

மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த வழி தியானம்தான். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து எளிதாக விடுபடலாம்.



தூக்கம்

மன அழுத்தம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமே போதிய தூக்கமின்மை தான். தூக்கம் என்பது ஒரு மனிதனுக்கு இன்றியமையாதது.

எனவே தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை கட்டாயம் தூங்க வேண்டும்.

நடைபயிற்சி

நடைபயிற்சி மேற்கொள்ளுவது என்பது ஒரு எளிய உடற்பயிற்சியாகும். நடைபயிற்சி மேற்கொள்வது நம்மை உறுதியுடனும் ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ளும்.

அதுமட்டுமல்லாது நடைபயிற்சியின் மூலம் மன அழுத்தத்தை குறைக்கும் ஆற்றல் மனதுக்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



உணவு பழக்கம்

உணவுகளை நேரம் தவறி எடுத்துகொள்வது தான் பெரும்பாலான உபாதைகளுக்கு காரணம். எனவே சரியான நேரத்தில் உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும்.

அதுபோல் சத்தான உணவுகளாகவும் எடுத்துக்கொள்ளவேண்டும். நாவல்பழம், சால்மன் மீன் மற்றும் பாதாம் போன்றவை மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

கால நிர்ணயம்

எந்த வேலையையும் செய்வதற்கு முன்னால் கால நிர்ணயம் செய்துகொள்ளுங்கள்.

அதற்கு அந்த வேலையை முடித்தாக வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்துகொள்ளுங்கள். இது தேவையில்லாத மன அழுத்தத்தை தவிர்க்கும்.

அளவோடு வேலை செய்யுங்கள்

முடியாது என சொல்ல பழகுங்கள். அளவுக்கு அதிகமான வேலையை இழுத்து போட்டு செய்வது என்பது எந்த வேலையையும் உருப்படியாக செய்யமுடியாமல் செய்து விடும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -