Posted by : Author
Wednesday, 30 March 2016

பல்வேறு விட்டமின்கள் உடல் ஆரோக்கியத்தை தேவை என்றாலும், விட்டமின் ஈ பற்றி பார்ப்போம்.
விட்டமின் ‘ஈ’ குறைந்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை, சோம்பேறித்தனம், பலவீனம், கவனக்குறைவு ஆகிய பிரச்சனைகள் ஏற்படும்.
பசலைக் கீரை

பச்சை இலைக் காய்கறிகளுள் ஒன்றான பசலைக் கீரையில் விட்டமின் ஈ மற்றும் இன்னும் பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே டயட்டில் இதனை சேர்த்துக் கொண்டால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
ஆலிவ் ஊறுகாய்

ஆலிவ் ஊறுகாயில் 100 கிராம் விட்டமின் ஈ உள்ளது. எனவே ஊறுகாய் மிகவும் பிடிக்கும் என்பவர்கள், இந்த ஆலிவ் ஊறுகாயை சாப்பிடலாம். இதனால், சோம்பேறித்தனம் நீங்கி சுறுசுறுப்பு கிடைக்கும்.
வேர்க்கடலை

வேர்க்கடலையில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. குறிப்பாக இதில் கரையக்கூடிய விட்டமின் ஈ ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை சளி சுரப்பியில் இருக்கும் செல் சவ்வுகளை ஒழுங்குபடுத்தும். அதுமட்டுமின்றி இவை சருமத்துளைகள் ஈஸியாக சுவாசிக்கவும் உதவும்.
பாதாம்

நட்ஸில் ஒன்றான பாதாமும் சிறந்த ஸ்நாக்ஸ் ஐட்டங்களில் ஒன்று. இதனை தினமும் சாப்பிட்டால், அதில் உடலுக்குத் தேவையான விட்டமின் ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கிடைக்கும்.
ப்ராக்கோலி

ப்ராக்கோலியில் விட்டமின்களான ஏ, சி, டி, ஈ மற்றும் கே போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளது. இதனையும் பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிட்டால் நல்லது.
சிவப்பு குடைமிளகாய்
குடைமிளகாயில் சிவப்பு குடைமிளகாயில் விட்டமின் ஈ, சி மற்றும் மற்ற சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் அடங்கியுள்ளன.
மசாலா பொருட்களில் ஒன்றான மிளகாய் தூளை உணவில் சேர்த்தால், காரம் மட்டுமின்றி உணவுக்கு ஒரு நல்ல சுவையும் கிடைக்கும். மேலும் இதனை உணவில் சேர்த்தால், விட்டமின் ஈ மற்றும் இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் உடலுக்கு கிடைக்கும்.

Related Posts :
- Back to Home »
- உணவே மருந்து »
- விட்டமின் ஈ சத்து குறைபாடா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

