Posted by : Author Monday, 8 February 2016


மனித உயிர்களைக் கொல்லும் மர்ம நோய்களுள் ஒன்றான புற்றுநோயைக் கண்டறிவதற்கு முறையான மருத்துவ முறைகள் இல்லாத நிலையில் தொடர்ந்தும் ஆராய்ச்சிகள் இடம்பெற்றுவருவது அறிந்ததே.
இவ்வாறான நிலையில் அமெரிக்க விஞ்ஞானிகள் DNA ஐ அடிப்படையாகக் கொண்ட புதிய இரத்தப் பரிசோதனை முறை ஒன்றினை கண்டறிந்துள்ளனர்.

இப் பரிசோதனை முறையின் ஊடாக 5 வகையான புற்றுநோய்களை இனங்காணக்கூடியதாக இருப்பதாக அவ் விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

அதாவது பெருங்குடல், நுரையீரல், மார்பு, வயிறு மற்றும் கருப்பை போன்றவற்றில் ஏற்படக்கூடிய புற்றுநோய்களை கண்டறிய முடியும்.

இக் குழுவானது 2013ம் ஆண்டு முதல் மேற்கொண்டு வந்த ஆய்வின் பயனாக இப் புதிய பரிசோதனை முறையை கண்டுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -