Posted by : Author Thursday, 31 December 2015


பெண்களுக்காக படைக்கப்பட்ட ஒரு தாவரம் என்றால் அது கல்யாண முருங்கை தான்.
தோட்டங்களில் அலங்கார மலருக்காக வளர்க்கப்படும் கல்யாண முருங்கை ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

குறிப்பாக பெண்களுக்காக படைக்கப்பட்ட மரம் என்றே சொல்லலாம், இந்த மரம் வீட்டிலிருந்தால் பெண்மை சார்ந்த எந்த நோயும் வராது என்று சொல்வதுண்டு.

பெண்களுக்கான நாளமில்லா சுரப்பி கோளாறுகளை நிவர்த்தி செய்யக்கூடியது.

இந்த மரத்தின் இலைகள் சிறுநீர் பெருக்கி, மலமிளக்கி, தாய்ப்பால் பெருக்கி, வாந்தி, வயிற்றுவலி, உடல் வெப்பம் மற்றும் வயிற்று புழுவை நீக்கும்.

இந்த இலையை அடையாக செய்து சாப்பிடலாம், தோசையாகவும் செய்யலாம். ‘சூப்’பாகவும் பருகலாம். இதனால் பெண்மைக்கான ஹார்மோன் உற்பத்தி அதிகரித்து பெண்ணின் அழகும், கவர்ச்சியும் கூடும்.

மாதவிலக்கு ஏற்படும் காலங்களில் வயிற்று வலி, உதிரப்போக்கு அதிகம் இருந்தால் இதன் இலையை மருந்தாக சாப்பிடலாம்.

இன்றைய பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சினைகள் அதிகம் இருக்கிறது. அவற்றை இந்த கல்யாண முருங்கை இலை அற்புதமாக குணப்படுத்துகிறது.

கர்ப்பப்பையில் கரு வளர்ச்சி சரியாக இருக்க எண்டோமேர்டியம் என்ற சதை கர்ப்பப்பையின் உள்ளே வளருகிறது. இந்த சதை வளர்ச்சி சரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் கரு அதனுடன் ஒட்டி குழந்தையாக உருவெடுக்கும்.

இன்று பெண்கள் துவர்ப்பான, நார்ச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வதில்லை. துரித உணவு, மன அழுத்தம் போன்ற பலவற்றாலும் பெண்களுக்கு இயற்கையாக ஏற்படக்கூடிய கருப்பை உட்புற சதை வளர்ச்சி ஏற்படுவதில்லை

அதனால் கரு உருவாகாத நிலை, உருவான கருவும், சிதைவுறும் நிலை போன்றவை ஏற்படுகின்றன. இதனால் பெண்மை தாய்மை அடைய முடியாத நிலை ஏற்படுகிறது. இதற்கு கல்யாண முருங்கை மரத்தின் பட்டையை கொஞ்சம் எடுத்து லேசாக இடித்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, பாதி நீராக சுண்டச் செய்தபின் அதை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கருப்பையின் உட்புறச் சதை வளர்ச்சி மேம்படும். கருவும் உருவாகும்.

இதன் இலையை நறுக்கி, வெங்காயம் போட்டு, தேங்காய் நெய் விட்டு சாப்பிட்டால் தாய்மார்களுக்கு பால் சுரக்கும்.


Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -