Posted by : Author Wednesday, 2 December 2015


காய்கறிகளில் ஒன்றான உருளைக்கிழங்கை அனைவரும் விரும்பிசாப்பிடுவார்கள்.
இதனை அன்றாம் எடுத்துக்கொள்ளாவிட்டாலும் வாரத்திற்கு இருமுறையேனும் சாப்பிடுங்கள்.

உருளைக்கிழங்கில் பாலைவிட புரதச்சத்து அதிகமாக உள்ளது.

பாலுக்குப் பதிலாக உருளைக் கிழங்கு மசியலைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால், அது இரவில் பசியினால் அழாமல் நிம்மதியாகத் தூங்கும்.

அடங்கியுள்ள சத்துக்கள்

உருளைக்கிழங்கில் புரதம் 2%ம், கொழுப்பு 0.1%ம், தாது உப்புக்கள் 0.61% ம், நார்ச்சத்து 0.41% , கார்போஹைட்ரேட், வைட்டமின் சி 17 மில்லிகிராமும், கால்சியம் 10 மில்லி கிராம், பாஸ்பரஸ் 40 மில்லிகிராம், விட்டமின் ‘ஏ’யும் விட்டமின் ‘பி’ முதலியனவையும் உள்ளன. சோடா உப்பு, பொட்டாசியம் முதலியனவும் அதிக அளவில் உள்ளன.

சாதாரண அளவில் உள்ள ஓர் உருளைக் கிழங்கில் 3.2 கிராம் அளவுகூட புரதச்சத்து கிடைக்கிறது.



மருத்துவபயன்கள்

ஊட்டச்சத்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயை குணப்படுத்த உருளைக்கிழங்கு மசியலை சாப்பிட்டால் போதும்.

அவித்த உருளைக்கிழங்கு தோலுடன் மசித்து, தினமும் ஒருவேளை வீதம் ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை சாப்பிட்டால், நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும், அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து, உடலுக்கு நன்மை செய்கிறது.

வயிற்றுப்புண் வயிற்றுக்கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பை கோளாறுகள் உள்ளவர்கள் இளஞ்சிகப்பு நிறத்தில் உள்ள உருகைக்கிழங்கை பச்சையாக அரைத்து சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக அருந்தினால், இரைப்பைகளில் உள்ள நச்சுநீர் தேங்குவதை தடுக்கலாம்.

உருளைக்கிழங்கு சாற்றை உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகுதிகளில் வீக்கம் முதலிய கோளாறுக்கு வெளிப்பூச்சாகத்தேய்க்க உடல் நலமுறும்.

இந்த சாற்றை அடுப்பில் வைத்து நன்றாக வற்றச் செய்து அதில் கிளிசரின் சேர்த்து பாட்டிலில் அடைத்துக்கொள்ள வேண்டும்.

வீக்கம் வலி உள்ள இடங்களில் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தைலத்தை அழுத்தி தேய்த்தால் ஒரே நாளில் வீக்கம் குறைந்து வலியும் நீங்கும்.

உருளைக்கிழங்கு சாற்றை இரவு தூங்க போவதற்கு முன்னர் முகத்தில் தேய்த்தால், தோலில் ஏற்படும் அழுக்கு மற்றும் முகச்சுருக்கங்கள் நீங்கும்.

உருளைக் கிழங்கில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது.

உருளைக்கிழங்கை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.




Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -