Posted by : Author
Saturday, 14 November 2015
வெப்ப மண்டல பிரதேசங்களில் வரக்கூடிய தூக்க நோயை ஒழிக்கக்கூடிய திட்டம் ஒன்றை ஸ்காட்லாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதனால், ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
காய்ச்சல், மூட்டு வலி போன்றவற்றை தரும் இந்த நோய் ஒரு வகை ஈயினால் பரவும் சிகிச்சை இல்லாவிட்டால் மரணமும் ஏற்படலாம்.
இது மனிதர்களுக்கு பரவுவதை தடுப்பதற்காக உகண்டாவில் ஆய்வாளர்கள் அந்த நோய்க்கான கிருமியை அழிக்கக்கூடிய மருந்தை பசுக்களுக்கு ஊசி மூலம் கொடுக்கின்றனர்.
இதனால் 90 வீதம் பலன் கிடைத்துள்ளதாக தெரிகின்றது.
அந்த நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தவுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆப்பிரிக்காவில் வருடாந்தம் 30000 பேருக்கு இந்த தூக்க நோய் தாக்குவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது.
Related Posts :
- Back to Home »
- மருத்துவம் »
- தூக்க நோய் கிருமியை ஒழிக்கக் புதிய திட்டம்...

