Posted by : Author Tuesday, 24 November 2015


பெண்­நோ­யி­யலில் பெண்கள் பரு­வ­ம­டையும் வயதில் இருந்து மெனோபோஸ் பருவம் வரைக்கும் பல­வித மருத்­துவ ரீதி­யான சிக்­கல்கள் வந்து போகும். அதா­வது மாத­விடாய் சக்­கரம் ஆரம்­பிக்கும் வய­தா­கட்டும் மாத­விடாய் சக்­கரம் நிரந்­த­ர­மாக நிற்கும் வய­தா­கட்டும் மருத்­துவ ரீதி­யான பல­வித சிக்­கல்­களை எதிர் கொண்­ட­வாறு தான் உள்­ளனர்.

இவற்றை கால­தா­ம­த­மா­காமல் கண்­ட­றிந்து சரி­யான தீர்­வு­களை கொடுப்­பது அவற்றை வர முன் தடுப்­பதும் இத்­து­றையில் முக்­கிய அங்­க­மாகும்.

மாத­விடாய் ஆரம்­பிக்கும் வயது வந்த பெண் ஒருவர் பரு­வ­ம­டை­யாமல் விட்டால் அது குறித்து ஹோர்மோன் பரி­சோ­தனை செய்ய வேண்டும். இதில் இருக்கும் குறை நிறைகள் கண்­ட­றிந்து சரி­யான சிகிச்­சை­களை வழங்க வேண்டி ஏற்­படும்.

குறிப்­பாக இளம் பெண்­களின் உய­ரத்­துக்­கேற்ற உடல் நிறைக்­கட்­டுப்­பாடும் சரி­யான உணவு பழக்­கமும் உடற்­ப­யிற்­சியும் முக்­கி­யப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

இதன் மூலம் இவர்­களில் ஒழுங்­காக மாத­வி­டாயும் சூல் முட்டை விருத்­தியும் ஏற்­படும்.

இளம் பெண்­களில் மணம் முடிக்க முன்னர் கர்ப்­பப்பை வாசல் புற்­றுநோய் தடுப்­பூசி போடப்­பட வேண்டும். கர்ப்­பப்பை வாசல் புற்­றுநோய் HPV எனப்­படும் ஒரு­வகை வைர­சினால் ஏற்­ப­டு­கின்­றது. இவ்­வை­ரசை எதிர்க்­கக்­கூ­டிய தடுப்­பூ­சியை மணம் முடிக்க முன்னால் போடு­வதன் மூலம் கர்ப்­பப்பை வாசல் புற்று நோயை தடுக்க முடியும். இவ்­வா­றான தடுப்­பூசி மூன்று போட வேண்டும். முதல் ஊசி போட்டு ஒரு மாத இடை­வெ­ளியில் இரண்­டா­வது ஊசி­யையும் இரண்­டா­வது ஊசி­போட்ட ஆறு மாத காலப்­ப­கு­தியில் மூன்­றா­வது ஊசியும் போட­வேண்டும்.
மேலும் இளம் பெண்கள் மணம் முடிக்க முன்னர் ருபெல்லா எனப்­படும் ஜேர்மன் சின்­ன­முத்து நோயை தடுக்கக் கூடிய ஊசி­யையும் போட வேண்டும். ருபெல்லா நோயா­னது கர்ப்­ப­கா­லத்தில் ஏற்­பட்டால் பெண்ணின் வயிற்றில் வளரும் சிசுவை தாக்கக் கூடு­ம் இ­தனால் பல அங்­க­வீனக் குறை­பா­டு­க­ளுடன் சிசுக்கள் பிறக்க கூடும் எனவே இவ்­வா­றான நோய்­களை தடுக்கக் கூடிய முக்­கி­ய­மான தடுப்­பூ­சிகள் பரு­வ­ம­டைந்த பெண்­களில் மணம் முடிக்க முன்னர் போடு­வது அவ­சி­ய­மாகும்.

நடுத்­தர வய­து­டைய பெண்­களின் கர்ப்­பப்­பையில் பைப்­பு­ரொயிட் கட்­டிகள் சூல­கக்­கட்­டிகள் பொலி­சிஸ்ரிச் ஒவரி மற்றும் சொக்­கிலேட் சிஸ்ட் எனப்­படும் நோய்கள் அதிகம் ஏற்­ப­டு­கின்­றது. இதனை சரி­யான ஸ்கான் பரி­சோ­த­னையில் கண்­ட­றிந்து நோய் அறி­கு­றி­க­ளுக்கு ஏற்ப சிகிச்­சைகள் வழங்க வேண்டும். பல­ருக்கு மருந்­துக்கள் மூலம் சிகிச்சை வழங்­கினால் போது­மா­னது சில­ருக்கு சத்­திர சிகிச்­சைகள் அவ­சி­ய­மா­கின்­றது. சத்­திர சிகிச்­சை­களும் வயிற்றை பெரி­த­ளவில் வெட்­டாமல் லப்­ரஸ்­கோப்பி எனப்­படும் இல­கு­வான சத்­திரசிகிச்சை மூலம் மேற்­கொள்ளக் கூடி­ய­தாக உள்­ளது. இதன் மூலம் பெண்கள் ஒரே நாளில் வைத்­தி­ய­சா­லையில் இருந்து வீடு செல்­லக்­கூ­டி­ய­தாக இருக்கும். அத்­துடன் சத்­தி­ர­சி­கிச்­சைக்கு பின்­ன­ரான வயிற்று வலியும் குறை­வாகக் காணப்­படும். இவ்­வா­றான லப்­பி­ரஸ்­கோப்பி சத்­தி­ர­சி­கிச்சை பெண் நோயி­யலில் முக்­கிய பங்­காற்­று­கின்­றது. எனவே பெண்­களின் வயிற்றில் ஏற்­படும் பிரச்­சி­னை­க­ளுக்கு ஸ்கான் பரி­சோ­தனை சரி­யான தீர்வை வழங்கும். சரி­யான நோயை கண்­ட­றிந்து சரி­யான சிகிச்சை அளிக்க உதவும்.

இன்­றைய கால­கட்­டத்தில் மணம் முடித்த பல தம்­ப­திகள் குழந்தைப் பாக்­கி­யத்­துக்கு ஏங்­கு­கின்­றனர். இவர்­களை சரி­யாகப் பரி­சோ­தித்து சரி­யான கார­ணங்­களை கண்­ட­றிந்து சரி­யான தீர்வு வழங்­கு­வது அவ­சி­ய­மாக உள்­ளது. எனவே, குழந்தை பாக்­கி­யத்தை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­கான சிகிச்­சை­க­ளாக ஆண்­களின் விந்து அணுக்­களை கூட்­டு­வ­தற்கும் பெண்­களின் சூல் முட்டை வளர்ச்­சியை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்கும் பலோ­பியன் குழாய் அடைப்­பு­களை எடுப்­ப­தற்கும் கருக்­கட்­டு­வ­தற்­காக சிகிச்­சைகள் வழங்­கு­வதும் செயற்கை முறை­யி­லான கரு­கட்­ட­லான IUI மற்றும் IVF சிகிச்­சைகள் வழங்­கு­வதும் அவ­சி­ய­மா­கின்­றது. இதற்­கான நவீன சிகிச்சை முறைகள் நாளுக்கு நாள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. அது­மட்­டு­மல்ல அயல் நாடான இந்­தியா சென்று பல சிர­மங்­க­ளுக்கும் மத்­தியில் பல இலட்சம் பண செலவு செய்து பல­வித சிகிச்­சைகள் மூலம் கர்ப்பம் தரித்­த­வர்கள் நான்கு அல்­லது ஐந்து மாத கால கர்ப்­பத்தில் எமது நாட்­டுக்கு திரும்பும் போது அவர்­க­ளுக்­கான சரி­யான பரா­ம­ரிப்பை தொடர்ந்து வழங்க வேண்டி உள்­ளது.

இவ்­வாறு செயற்கை முறை கருக்­கட்­டலில் கர்ப்பம் தரித்த தம்­ப­தி­களின் மனதில் உள்ள பயமும் எதிர்ப்­பார்ப்பும் ஏக்­கமும் எப்­படி என்­பதை புரிந்து அவர்­க­ளது தேவை­களை நிறை­வேற்றி இறு­தியில் ஆரோக்­கி­ய­மான நிறை­மாத குழந்­தையை பிர­ச­வித்து கொடுக்க வேண்­டி­யதும் அவ­சி­ய­மாக உள்­ளது.

மேலும் பெண் நோயி­யலில் எதிர்­பா­ராத வித­மாக தோன்றும் கர்ப்­பப்பை புற்­று­நோய்கள், சூலகப் புற்­று­நோய்கள் மற்றும் கர்ப்­பப்பை வாசல் புற்­று­நோய்கள் கண்­ட­றி­யப்­பட்­ட­வுடன் அதற்­கான சத்­திர சிகிச்­சையை வெற்­றி­கா­ர­மாக மேற்­கொண்டு பாதிக்­கப்­பட்­ட­வர்­களை நோயில் இருந்து மீட்க உதவி செய்ய வேண்டும். புற்­று­நோய்­களால் பாதிக்­கப்­பட்ட போதும் அந்தக் குடும்­பத்­தி­ன­ரது மன நிலை­களை புரிந்து கொண்டு அவர்­க­ளது சந்­தே­கங்­களை தீர்த்து வைத்து அடுத்து என்ன செய்­வது என்­ப­தற்­கான சரி­யான வழி­காட்­ட­லா­கவும் விளங்க வேண்டும். அத்­துடன் இது போன்ற புற்று நோய்கள் வராது ஆரம்­பத்­தி­லேயே ஒழுங்கான (PAP SMEAR) மற்றும் ஸ்கான் பரி­சோ­த­னைகள் செய்­வது அவ­சி­ய­மாகும். அதன் முக்­கி­யத்­துவம் விளங்­கா­த­வர்­க­ளுக்கு அதனை புரி­ய­வைத்து நோயின் தாக்­கங்­க­ளி­லி­ருந்து அவர்­களை காப்­பாற்ற உதவி செய்ய வேண்டும்.

மெனோபோஸ் பரு­வத்தை நெருங்கும் பெண்கள் பல­வி­த­மான பெண் நோயியல் பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்டி ஏற்­ப­டலாம்.

இவ்­வா­றான பிரச்­சி­னைகள் ஏற்­படும் போது நோய் அறி­கு­றிகள் தோன்­றி­ய­வு­ட­னேயே வைத்­திய ஆலோ­ச­னை­களை பெற்றுக் கொள்ள வேண்டும்.

மெனோபோஸ் பரு­வத்­தி­லி­ருக்கும் பெண்­களும் பல வித­மான உடல் உள தாக்­கங்­க­ளிற்கு உள்­ளா­கின்­றனர். ஆரம்­பத்­தி­லேயே தகுந்த வைத்­தி­ய­ரிடம் தமக்­கு­ரிய சிகிச்­சை­களை பெற்றுக் கொள்வதன் மூலம் இத்தாக்கங்களை வெற்றிகொள்ளலாம்.

தமது அன்றாட கடமைகளில் மூழ்கியிருக்கும் பெண்கள், கல்வி, வேலை, குடும்பம், கணவன், பிள்ளைகள் என பல்வேறுபட்ட பொறுப்புகளை சுமப்பதனால் தமது உடல் ஆரோக்கியத்தை கவனிப்பதற்கு நேரமில்லாது நோய்களிற்கு ஆளாகின்றனர். பின்னர் பெரியளவில் நோய் அறிகுறிகள் தோன்றும் போது அவற்றை தாங்கும் வலுவில்லாதவர்களாகின்றனர்.

எனவே, வெவ்வேறு பருவங்களில் பெண்களிற்கு ஏற்படும் பெண்நோயியல் பிரச்சினைகளிற்கு ஆரம்பத்திலேயே வைத்திய ஆலோசனைகளை தகுந்த வைத்தியர்களிடம் பெற்றுக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேணலாம்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -