Posted by : Author
Saturday, 14 November 2015

நாள்தோறும் 7 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு சிறுநீரக செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இது அமெரிக்க ஐக்கிய நாட்டில் பாஸ்டன் நகரில் உள்ள பிர்ஹாம் பெண்கள் மருத்துவமனை மருத்துவர்கள் கடந்த 11 ஆண்டுகளாக நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நாள்தோறும் குறைவாக தூங்குபவர்களின் சிறுநீரக செயல்பாடு படிப்படியாக குறைந்து வருவதாக பிர்ஹாம் பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற 4238 நோயாளிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக மருத்துவமனை மருத்துவர் ஜோசப் மெக்மில்லன் கூறினார்.
மேலும், மனிதர்களின் உள் உறுப்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் ஒரு வழக்கமான காலமுறையை பின்பற்றுகின்றன. அதாவது சில உறுப்புகள் நாம் தூங்கும்போதும் மட்டும் இயங்கும். நாம் தூங்கும் நேரத்துக்கும் சிறுநீரக செயல்பாட்டுக்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளது.