Posted by : Admin Thursday, 27 August 2015

அமரர் சிவக்கொழுந்து கயிலைநாதன் சாமுவேல் அவர்களின் 3 ஆம்  வருட நினைவு தினத்தை ஒட்டி மன்னார் பொது வைத்தியசாலை பிராத வீதியில் பயணிகள் தரிப்பிடம் ஒன்று மக்களின் பாவனைக்காக நேற்று செவ்வாய்கிழமை(25) மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

அமரர் திரு. சிவகொழுந்து கையிலைநாதன் சாமுவேல் அவர்கள்; மன்னார் பொலிஸ் நிலையத்தில் 33 வருடங்கள் எழுதுவினைஞராக கடமையாற்றி ஓய்வு பெற்றிருந்த நிலையில் அமரத்துவம் அடைந்தார்.

அமரர் சிவக்கொழுந்து கயிலைநாதன் சாமுவேல்  அவர்களின் புதல்வரின் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்விற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் மன்னார் நகரசபையின் செயலாளர் எல். றெனால்ட் பிறிட்டோ, அமரர் சிவக்கொழுந்து கயிலைநாதன் சாமுவேல்  அவர்களின் பாரியார் மற்றும் குடும்ப உறவினர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது





Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -