Posted by : Author
Saturday, 8 August 2015
ஒற்றைத் தலைவலி ஆனது ஆண், பெண், வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்கக்கூடியது. ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவருக்கு மிதமான முதல் கடுமையான தலைவலி இருக்கும். இந்த வலி சில மணித்தியாலங்கள் முதல் மூன்று நாட்கள் வரைகூட நீடிக்கும். மிக்ரெய்னால் ஆண்களைவிட பெண்களே அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இவர்களால், ஓரளவுக்கு மேல் ஒற்றைத் தலைவலியால் ஏற்படும் வலியைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.
ஒற்றைத் தலைவலியானது மூளையின் ஒரு பகுதியில் ஏற்படும். இதனால் பாதிக்கப்பட்டவருக்கு தொடர்ச்சியான தும்மல், வாந்தி மற்றும் ஒலி, ஒளியைக் கண்டால் பயம் போன்றன ஏற்படும்.
வலி ஏற்படுவதற்கு முன், உடலிலிருந்து ஒரு மணம் உண்டாவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.
மூளையில் உள்ள இரசாயனமான செரடினின் அளவு குறைவதால் இந்த வலி ஏற்படுகின்றது. ஆயினும், செரடினின் அளவு குறைவதற்கான காரணம் இதுவரை சரிவரக் கண்டுபிடிக்கப்படவில்லை.
செரட்டினின் அளவு குறையும்போது இரத்த நாளங்கள் விரிவடைவதால், தலையில் சுத்தியலால் அடித்தது போன்ற வலியை உணர்வார்கள்.
ஒற்றைத் தலைவலியை முழுமையாக குணப்படுத்துவதற்கான சிகிச்சைகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயினும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம்.
உண்மையில், இந்தத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களிடம் செல்லவேண்டும் என்பதில்லை. பரிந்துரைக்கப்பட்ட வலி நிவாரணிகளால் வலி குறையவில்லையென்றாலோ, மீண்டும் மீண்டும் தலைவலி ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. சிலர் மாற்று மருத்துவ வழிகளில் அல்லது தியானம் போன்ற வழிகளில் ஒற்றைத் தலைவலியை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள்.
ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் தமக்குத் தாமே சில வழிமுறைகளில் தற்காலிக ஆறுதல் பெற்றுக்கொள்கின்றனர். அமைதியான, இருட்டறையில் ஓய்வெடுப்பது, தலையில் குளிர்ந்த அல்லது சூடான நீரால் ஒத்தடம் கொடுப்பது, தேநீர் அருந்துவது போன்றன உடனடி நிவாரணம் தரக்கூடிய வழிமுறைகள் ஆகும்.
வலி தொடங்கும்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், தீவிரம் குறையும்.