Posted by : Author
Friday, 3 July 2015

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்றது வெந்தயம்.
வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு மட்டுமல்லாமல் சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது.
வெந்தயத்தில் உள்ள சத்துக்கள்:
புரதச்சத்து
சுண்ணாம்புச் சத்து
பாஸ்பரஸ்
பொட்டாசியம்
சோடியம்
இரும்புச் சத்து
விட்டமின் ஏ
தையாமின்
ரிபோபிளேவின்
நிக்கோடினிக் அமிலம்
ஆகிய சத்துப் பொருட்கள் கணிசமாக அடங்கியுள்ளன.
சர்க்கரை நோயாளிகளுக்கு எதற்காக நல்லது?
சாதாரணமாக நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 80 - 110 மி.லி வரை இருக்கலாம்.
நாம் எடுத்துக் கொள்கிற உணவு, அதன் கலோரி போன்றவற்றைப் பொறுத்து இந்த சர்க்கரையின் அளவு வேறுபடும்.
அதிக கலோரி உணவு உட்கொள்கிற போது, சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதுதான் இன்சுலினின் வேலை. நீரிழிவுக்காரர்களுக்கு இந்த இன்சுலின் சுரப்பு சரியாக இருக்காது.
அந்த இன்சுலின் சுரப்பை ஊக்கப்படுத்தி, கிரியா ஊக்கியாக செயல்படுகிற வேலையைத் தான் வெந்தயம் செய்கிறது.
தினமும் இரவில் 1 டீஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரோடு, வெந்தயத்தையும் சேர்த்து எடுத்துக் கொண்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதிலும் வெந்தயத்துக்கு மிகப்பெரிய பங்குண்டு.
Related Posts :
- Back to Home »
- நீரிழிவு நோய் »
- சர்க்கரை நோயாளிகள் வெந்தயம் சாப்பிடுவது எதற்காக?

