Posted by : Author Friday, 12 June 2015


பல்வேறான உணவுப்பொருட்களில் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் கலக்கப்படுகின்றன.
மொறு மொறு பிஸ்கெட்டுகளையும், சிப்ஸ்களையும் வாங்கும் மக்கள், அதற்குள் மறைந்திருக்கும் ஆபத்து மிகுந்த வேதிப்பொருட்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இதோ உணவுகளில் கலக்கப்படும் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள்

பி.எச்.ஏ (Butylated hydroxyanisole): இது உணவுப் பொருள் கெட்டுப் போகாமல் நீடித்து வருவதற்காக கலக்கப்படும் வேதிப்பொருள்.

இது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதிக்கக் கூடியது. உருளைக் கிழங்கு சிப்ஸ், சூயிங்கம், பாஸ்ட் புட் வகைகளில் கலக்கப்படுகிறது.

சோடியம் நைட்ரேட்(Sodium Nitrate): உணவுக்கு நிறம் ஊட்டவும், சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்கவும் சேர்க்கப்படுகிறது. பெரும்பாலும் மாமிசம் பதப்படுத்தப் பயன்படுகிறது.

வயிற்று வலி, மூளை மற்றும் சிறுநீரக புற்று நோய், தலை வலி, வாந்தி போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். எனவே, பதப்படுத்தப்பட்ட மாமிசங்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

செயற்கை வண்ணம் மற்றும் வாசனைப் பொருட்கள்: சிப்ஸ், குக்கிஸ் போன்ற பேக்கிங் உணவு வகைகளின் தயாரிப்பில் பயன்படுகிறது.

ஒவ்வாமை, தலைசுற்றல் போன்ற விளைவுகள் ஏற்படும். பிரிலியண்ட் ப்ளு, டார்ட்ரஜைன், சன்செட் மஞ்சள் போன்ற செயற்கை நிறங்கள் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மோனோ சோடியம் குளுடமேட்(Monosodium Gludamate): இது நூடுல்ஸ், சிப்ஸ், ஸ்நாக்ஸ் உணவுத் தயாரிப்பில் சுவையை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படுகிறது.

இதனால் தலைவலி, இதய படபடப்பு, நெஞ்சுவலி, மூளை மற்றும் ஜீரண மண்டல பாதிப்பு ஏற்படுகிறது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -