Posted by : NEWMANNAR
Tuesday, 6 January 2015
ஆரோக்கியத்துக்கு 6 பழக்கங்களை பட்டியலிடுகிறார் சென்னையைச் சேர்ந்த இயற்கை மருத்துவர் கீர்த்தனா. அவை…..
1. மனதை லேசாக்குங்கள்
மனதைப் பொறுத்துதான் நோய்களின் வீரியம் அதிகரிப்பதும் குறைவதும். மனதை ஆரோக்கியமாக மாற்றும் வித்தையைத் தெரிந்து கொண்டால் நோயை எளிதில் குணப்படுத்தி விடலாம். உடல் உறுப்புகளை வலிமை படுத்தினால் உணர்வுகள் சரியாகிவிடும்.
புத்துணர்வும் கிடைக்கும். ஹெல்தி உணவு, சுவாசம், தோற்ற அமைப்பு (posture) போன்றவை சரியாக இருந்தால் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்துவிடும். மனம் ஆரோக்கியம் பெற அமைதியான சூழல், அளவான, ஆழ்ந்த தூக்கம் அவசியம்.
2. தியானம் பழகுங்கள்
பிரபஞ்சத்திலிருந்து நேரடியான ஆற்றலை ஈர்க்கும் சக்தி தியானத்துக்கு உண்டு. இது நம் உடல் மற்றும் மனதை மேம்படுத்தும். தியானம் செய்யத் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. பிறப்பு முதல் இறப்பு வரை நம்முடனே எந்நேரமும் இருக்கும் சுவாசத்தைக் கவனிக் கலாம். காலை வேளையில் அடிவயிற்றிலிருந்து வெளிவரும் மூச்சுச் செல்லும் பாதையைக் கவனிக்கலாம். நாளடைவில் எண்ண ஓட்டங் கள் குறைந்து மூச்சை கவனிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். இதுவே தியானம் செய்த பலனை கொடுத்துவிடும்.
3. உணவுக்கு மதிப்பளியுங்கள்
உண்ணும் உணவுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். டிவி பார்த்துக் கொண்டே என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது தெரியாமலேயே சாப்பிடுவது சரியான முறையல்ல.
தரையில் உட்கார்ந்து உணவை ரசித்து ருசித்து மென்று சாப்பிட தொடங்கினால் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமக்குப் பலத்தைத் தரும்.
உண்ணும் போது கறிவேப்பிலை, மிளகு, தக்காளி போன்றவற்றைத் தூக்கி எரிந்துவிட்டு சாப்பிடுவது சரியான உணவுப் பழக்கம் அல்ல. தூக்கி எறிவதற்காக எந்தப் பொருளும் சமையலில் சேர்ப்பது கிடையாது. அனைத்தையும் சாப்பிடவே உணவு சமைக்கப்படுகிறது.
4. தன்னை நேசிக்கத் தொடங்குங்கள்
நம்மை நாமே விரும்புவதும், அக்கறையோடு நேசிக்கவும் தொடங்குங்கள். மற்றவர்களிடம் அன்பு செலுத் தி அரவணைப்பது போலத் தங்களின் மேல் அக்கறை கொண்டு சரிவரப் பராமரித்துக் கொள்வதும் நமக்கு நாமே செய்து கொள்ளும் உதவியாகும். உடலும் மனமும் மகிழ்ச்சி அடையும். மன அழுத்தம், மன சோர் வுக்கான தீர்வு வெளியில் அல்ல நம்மிடமே இருக்கிறது. உடலுக்குத் தரும் முக்கியத்துவத்தை மனதுக்கும் தந்து அதற்கு என்ன தேவை என்பதைப் புரிந்து கொண்டு பூர்த்தி செய்யுங்கள்.
5. உடலுழைப்பை உருவாக்குங்கள்
உடலுழைப்பு சார்ந்த வேலை இன்று பலருக்கும் இல்லை. ஆதலால், உட லுழைப்பை நாமே உருவாக்கலாம்.
காலை, மாலை உடற்பயிற்சி செய்வது, கீழே உட்கார்ந்து சாப்பிடுவது, அருகில் இருக்கும் கடைக்கு நடந்து செல்லுவது, வீட்டுப் படிகளில் ஏறி இறங்குவது, வீட்டை சுத்தப்படுத்துவதில் மெஷின்களைப் பயன்படுத்தாமல் இருப்பது, உடலுழைப்புக்கு என விடுமுறை நாட்களை ஒதுக்கி வைப்பது என உடலுழைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபடலாம்.
6. உணவுப் பழக்கத்தைச் சீராக்குங்கள்
காலை உணவை தவிர்த்தல், ஒரு வேளை தானே என்று துரித உணவுகளைச் சாப்பிடுதல், ஆரோக்கியத்தைப் புறந்தள்ளிவிட்டு, சுவைக்கு அடிமையாதல், அடிக்கடி விரதம் இருத்தல், சுகாதாரமற்ற உணவை உட் கொள் ளுதல் போன்ற பழக்கங்களைத் தவிர்க்கலாம்.
பசித்த பிறகு சாப்பிடும் பழக்கத்தைத் தொடங்கலாம். அனைத்து உணவுகளையும் அளவாக எடுத்துக் கொள்வது நல்லது. எப்போதும் டிரீட், பார்ட்டி போன்றவற்றை மதிய வேளையில் வைத்துக் கொள்ளுங்கள். இரவில், டின்னர் பார்ட்டியை தவிருங்கள்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கிய வாழ்வு , மருத்துவம் »
- ஆரோக்கியத்துக்கு கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய 6 பழக்கங்கள்

