Posted by : NEWMANNAR Tuesday, 6 January 2015



வயிற்றில் உருவான அல்சர் நோயால் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக இரத்த வாந்தி ஏற்படுகிறது. வயிற்றில் இரத்தக்கசிவு அதிகமாக இருக்கும்போது திடீரென வயிற்றில் சுருக்கம் ஏற்பட்டால் நோயாளி இரத்தவாந்தி எடுப்பார். இவ்வகையிலான இரத்தப்போக்கு ஒரு லிட்டர் அல்து அதற்கு மேலும் இருக்கலாம்.

நோயாளியை கவனித்துக்கொள்ளும் முறை

நோயாளியை படுக்க வைத்து அவரின் கால்கள் மற்றும் பாதங்கள் உடல் மட்டத்தை விட சற்று உயர்வாக இருக்குமாறு செய்யுங்கள். அவரை மிதமான வெப்பநிலையில் வையுங்கள். போர்வையைப் போர்த்தியோ அல்லது ஒற்றடம் கொடுத்தோ அதிக சூடு ஏற்படுத்தாதீர்கள். கதகதப்பான நிலையில் வையுங்கள். அதே நேரம் குளிரில் நடுங்கவும் வைத்துவிடாதீர்கள். வாய்வழியாக நீரை கொடுக்க வேண்டாம். 

தண்ணீர்கொண்டு வாயை கழுவலாம். ஆனால் அந்நீரினை சிறிதளவும் விழுங்கிவிடக்கூடாது. உடனே டாக்டரை வரச்செய்யுங்கள் அல்லது மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள். ஆம்புலன்சை அழையுங்கள். நோயாளி மயக்கமடைந்து விட்டால் உடனே அவரை மூச்சு விடுவதற்கு ஏதுவாக ஒரு பக்கமாக சாய்ந்து படுக்க வையுங்கள். எனினும் கால்களை சற்று உயரத்தில் இருக்குமாறே செய்யுங்கள்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -