Posted by : NEWMANNAR
Thursday, 8 January 2015
உடலில் அடிக்கப்படும் வாசனை திரவியங்களைப்போல, வீட்டினுள் அடிப்பதற்கும் பல்வேறு வாசனை திரவியங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றை வாங்கி வீடுகளில் அடிப்பதன் மூலம் கிருமிகள் மற்றும் துர்நாற்றங்கள் களையப்படுவதுடன், அறையும் புத்துணர்ச்சி பெறுகிறது.
இந்த புத்துணர்ச்சி திரவியங்கள் மற்றும் சுத்தப்படுத்தும் பொருட்களால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏனெனில் இந்த பொருட்களை பயன்படுத்தும் போது லிமோனின் எனப்படும் கரிம வேதியியல் மாற்றம் நிகழ்வதையும், இதுவே அந்த பொருட்களின் வாசனைக்கு மூலகாரணமாக இருப்பதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எனவே இந்த பொருட்களை உபயோகிக்கும் போது பனிப்புகை மற்றும் ஓசோன் வாயு போன்ற நச்சுகள் வெளிப்படுவதால் உட்புற காற்று மாசுபடுவதாகவும், இதை சுவாசிக்கும் மனிதர்களுக்கு பக்க விளைவு ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கிய வாழ்வு »
- புத்துணர்ச்சி வாசனைத் திரவியங்களால் ஆபத்து

