Posted by : NEWMANNAR
Monday, 19 January 2015
பொதுவாக நம்மை பாம்போ அல்லது விஷப் பூச்சிகளோ தீண்டினால் உடனே மருத்துவரை நாடுவோம்.
ஆனால் இதை வீட்டிலிருந்தபடியே மிகவும் எளிமையாக வைத்தியம் செய்து நம் உடலை சரிசெய்ய உதவுவது காட்டுசுரை.
இதனை பேய்ச்சுரை என்றும் அழைப்பர். இதன் இலை, கொடி, காய், விதை என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது.
காட்டுச்சுரையின் மகத்துவங்கள்
காட்டுச்சுரையின் வேரைச் சேகரித்து நன்கு அரைக்க வேண்டும். இதை விஷத் தீண்டலுக்கு உள்ளானவர்களுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு அளவு உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். இந்த இலையை அரைத்து கடிவாயில் வைத்துக் கட்டிவிட வேண்டும்.
திடீரென ஏற்படும் பேதி, வாந்தி முதலியவற்றால் விஷத்துக்கு முறிவு ஏற்பட்டு விஷக்கடிக்கு ஆளானவரின் உயிர் மீளும்.
பேய்ச்சுரையின் இலைகளைக் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து சம அளவு தும்பை இலைச்சாறு சேர்த்து மூக்கில் சில துளிகள் விட்டு ஊதிவிட வேண்டும்.
ஒரு தும்மலோடு விஷக்கடிக்கு ஆளானவருக்கு நினைவு திரும்பிவிடும்.
இதன்பின் பேய்ச்சுரையின் வேரை அரைத்து குடித்துவிட்டால் விஷ முறிவு ஏற்பட்டு எளிதாக குணமடையலாம்.
இது கொடிய பாம்புகளின் விஷங்களை மட்டுமின்றி தேள்க்கடி மற்றும் பிற பூச்சிகளின் விஷத்தையும் விரட்டும் தன்மை கொண்டது.
இதனை உணவில் சில நாட்களுக்கு சேர்த்து கொண்டுவருவதால், ஆரோக்கியமான வாழ்வை மீண்டும் பெறலாம்.
Related Posts :
- Back to Home »
- மூலிகை மருத்துவம் »
- உங்கள் உடலில் விஷம் பரவிவிட்டதா? இதோ சூப்பர் மருந்து
