Posted by : NEWMANNAR
Thursday, 8 January 2015
தினமும் ஒன்றரை கப்-க்கு மேல் பால் அருந்துவது ஆயுளை குறைக்கும் என ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சுவீடன் நாட்டின் உப்சலா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்.
கார்ல் மைக்கேல்சன் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு பாலில் லாக்டோஸ் மற்றும் கிளாக்டோஸ் இனிப்பு அதிகம் காணப்படுவதால் அதை அதிகமாக பருகினால் எதிர்விளைவுகள் ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளாக 39 முதல் 74 வயது வரை 61 ஆயிரம் பெண்களிடமும், 45 முதல் 79 வயது வரை 45 ஆயிரம் ஆண்களிடமும் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
அவர்களில் தினமும் ஒன்றரை கப்-க்கும் அதிகமாக பால் அருந்தியவர்கள் மற்றவர்களை விட சீக்கிரமே இறந்துவிடுவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அதிகமாக பால் அருந்துவது எலும்பு தேய்மானத்தை ஏற்படுத்தும் என அந்த ஆய்வு கூறுகிறது.
எனினும், குறைந்த அளவு லாக்டோஸ் கொண்ட பால் அருந்துவதால் எந்த ஆபத்தும் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.