Posted by : Admin
Thursday, 13 November 2014
உடல் வளர்ச்சிக்கும், என்றென்றும் ஆரோக்கியத்திற்கும் கீரைகள், காய்கறிகள் மிகவும் அவசியம்.
உடம்பு சரியில்லை என மருத்துவர்களிடம் சென்றால் அவர்களது முதல் அறிவுரை பச்சை இலை காய்கறிகள் மற்றும் கீரைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே.
வாரத்திற்கு மூன்று முறையேனும் கீரைகள் உட்கொள்ளும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், எனவே ஆரோக்கியத்துடன் வாழலாம்.
அகத்தி கீரை
அகத்தி கீரையில் 8.4 சதவிகிதம் புரதமும், 1.4 சதவிகிதம் கொழுப்பும், 3.1 சதவிகிதம் தாது உப்புகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மாவுச்சத்து, இரும்புசத்து, வைட்டமின் ஏ ஆகியவையும் உள்ளன.
உடலின் உஷ்ணத்தை தணிக்கும் இந்த கீரை, மூளையை பலப்படுத்தும் சக்தி கொண்டது.
தினமும் இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் படிப்படியாக குறையும்.
கரிசலாங்கண்ணி
ஞானமூலிகை என போற்றப்படும் கரிசலாங்கண்ணி, புற்றுநோய் கிருமிகளின் வளர்ச்சியை தடுக்கிறது.
மேலும் கெட்ட பித்தநீரை அகற்றி தேகத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.
ஈரல், மண்ணீரல் வீக்கத்தை குறைத்து மஞ்சள் காமாலை நோயை விரட்டுகிறது.
தூதுவளை
வேர் முதல் பழம் வரை அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் கொண்ட இந்த தூதுவளை இலையை பிழிந்து எடுத்த சாற்றை 1 அல்லது 2 துளி காதில் விட்டால் காதுவலி மற்றும் காதில் சீழ் வடிதல் போன்றவை குணமாகும்.
ஆஸ்துமா, மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்தது.
பொண்ணாங்கண்ணி
இதன் இளம் தளிர் பாகங்கள் உணவு மற்றும் மருத்துவத்திற்கு பயன்படுகிறது, இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் நெருங்கவே நெருங்காது.
கண் எரிச்சல், கண் கட்டி போன்ற நோய்களை குணமாக்குவதுடன் வாய் நாற்றம் மற்றும் வாய் புண்களையும் குணமாக்குகிறது.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கிய வாழ்வு »
- ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் கீரைகள்

