Posted by : Admin Wednesday, 2 July 2014

அன்றாட மாறிவரும் வாழ்க்கை முறையில் நம்மை பல வித நோய்களும் எளிதாக தொற்றிக் கொள்கிறது. வாழ்க்கை முறைகளுக்கு ஏற்றவாறு நாம் நம் உணவு பழக்கங்களை மாற்றிக் கொள்வது அவசியமாக இருக்கிறது.

நாம் உண்ணும் உணவில் கவனம் செலுத்தாத போது 60 வயதில் வரவேண்டிய இரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு, புற்றுநோய்கள் போன்றவை 25 வயதிலேயே தொற்றிக் கொள்கிறது.

எனவே பலர் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் குறைவாக உள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உட்கொள்ள விரும்புகின்றனர். இறைச்சியில் அனைத்து சத்துகளும் வளமாகவே உள்ளது.

இருப்பினும் அனைத்து இறைச்சியிலும் கொழுப்புக்கள் குறைவாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் முயல் கறியில் இன்றைய கால தலைமுறையினர் எதிர்பார்க்கும் வகையிலான அத்தியாவசிய சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.

மற்ற இறைச்சிகளுடன் ஒப்பிடுகையில் முயல் கறியில் கொலஸ்ட்ராலானது மிகவும் குறைவாக உள்ளது. எனவே எடையை பராமரிக்க நினைப்போர் முயல் கறியை அச்சமின்றி சாப்பிடலாம்.

குடல் பாதை பிரச்சனை

முயல் கறியில் எளிதில் செரிமானமாகக்கூடிய புரோட்டீன்களைக் கொண்டுள்ளது. இதனால் இதனை உட்கொண்ட பின்னர் எந்த ஒரு இம்சையையும் சந்திக்கமாட்டோம்.

ஆகவே கடுமையான குடல் பாதை பிரச்சனை உள்ளவர்களும் இதனை சாப்பிடலாம்.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சோடியம் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்ளக்கூடாது.

ஆனால் முயல் கறியில் சோடியம் குறைவாக இருப்பதால், இதனை அத்தகையவர்கள் தாராளமாக உட்கொள்ளலாம்.

சீரான மெட்டபாலிசம்

முயல் கறியை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால், உடலின் மெட்டபாலிசமானது சீராக இருக்கும். இதனால் உடலில் கொழுப்புக்களானது தங்குவதைத் தடுக்கலாம்.

இதய நோய்

மற்ற கறிகளுடன் ஒப்பிடும் போது முயல் கறியில் செரிவான கொழுப்பு அமிலங்கள் குறைவாகவும், இதயத்தை பாதிக்காத கொழுப்பு அமிலங்கள் அதிகமாகவும் இருப்பதால், இதய நோய் உள்ளவர்கள் எவ்வித பயமும் இல்லாமல் முயல் கறியை சாப்பிடலாம்.

கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்

மற்ற இறைச்சியுடன் ஒப்பிடும் போது முயல் இறைச்சியில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிக அளவில் நிறைந்துள்ளது.

புற்றுநோய்

முக்கியமாக புற்றுநோய் உள்ளவர்கள், புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்கும் போது, முயல் கறியை சாப்பிட்டு வந்தால், அதனால் ஏற்படும் அபாயத்தை மெதுவாக குறைக்க முடியும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -