Posted by : Admin
Wednesday, 26 March 2014
தாய்ப்பால் புகட்டும் பெண்கள் தினமும் பப்பாளி பழம் சாப்பிடுவதன் மூலம் பால் பெருகும்.
நரம்பு வலியால் அவதிப்படுகிறவர்கள் பப்பாளி இலையை கொதித்த நீரில் முக்கியோ, தீயில் சுட்டோ வலியுள்ள பகுதியில் வைத்தால், வலி குறைந்துவிடும்.
பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். ஏனென்றால் பெண்களின் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அதில் இருக்கின்றன.
குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், பப்பாளி பழம் சாப்பிடுகிறவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு.
100 கிராம் பப்பாளியில் கிட்டத்தட்ட 2500 இன்டர்நேஷனல் யூனிட் வைட்டமின் ஏ சத்து இருக்கிறது. அதனால் பப்பாளி சாப்பிட்டால், பார்வை சக்தி அதிகரிக்கும். பழுத்த பப்பாளியின் தசை பகுதியை எடுத்து பிசைந்து, முகத்தில் பூசி அரை மணி நேரம் வைத்திருந்து முகத்தை கழுவுங்கள்.
சரும சுருக்கம், படை போன்றவை நீங்கி, முகம் ஜொலிக்கும். பப்பாளி பழத்தை ஆண்கள் தினமும் சாப்பிட்டால் அவர்களது தாம்பத்ய சக்தி அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. ஓய்வற்ற உழைப்பு, மனஅழுத்தம் நிறைந்த வேலை, உடற்பயிற்சியின்மை போன்றவைகளால் கழுத்து வலி, முதுகுவலி, முதுகு சவ்வு தேய்தல் போன்ற பாதிப்புகளால் நிறையபேர் அவதிப்படுகிறார்கள்.
அந்த பாதிப்புளை கட்டுப்படுத்தும் சக்தி, பேப்பைன் என் சைம்க்கு இருக்கிறது. அதனால் வலியும், நோயுமின்றி வாழ விரும்புகிறவர்கள் பப்பாளி பழத்தை தினமும் சாப்பிடவேண்டும்.