Posted by : Admin Thursday, 16 January 2014

பருக்களால் வந்த தழும்புகள் மறைய இயற்கை பேஸ் மாஸ்க் டீனேஜ் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்கள் ஏற்படுவது சகஜமான விஷயம். அந்த பருக்களால் வந்த தழும்புகள் மறைய கிரீம்களைப் பயன்படுத்துவதை விட இயற்கைப் பொருட்களைக் கொண்டு முயற்சித்தால், பருக்களும், அவற்றால் ஏற்பட்ட தழும்புகளும் மறைவதோடு, முகமும் நன்கு பொலிவோடு காணப்படும். இப்போது அந்த பருக்களையும், அதனால் ஏற்பட்ட கருமையான தழும்புகளையும் போக்கும் சில அழகுக் குறிப்புகளைப் பார்க்கலாம்.. 


வெந்தயக்கீரை ஃபேஸ் பேக் : 

சிறிது வெந்தயக்கீரை இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக மைப்போல அரைத்துக் கொண்டு, பின் அதனை முகத்தில் பூசிக் கொள்ளுங்கள். 30 நிமிடங்கள் கழித்து நன்கு கழுவி விடுங்கள். இதை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் படிப்படியாக தழும்புகள் மறைவதை காணலாம். 

வெந்தய ஃபேஸ் பேக் : 

சிறிது வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, அவற்றை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவிடுங்கள். தண்ணீர் நன்கு ஆறியதும், அதனை முகத்தில் தழும்புள்ள இடங்கள் மீது தடவுங்கள். மேலும் முகத்தைக் கழுவ இந்தத் தண்ணீரைப் பயன்படுத்துங்கள். முக்கியமாக கழுவியப் பின்னர் துடைக்க வேண்டாம். அப்படியே காற்றினால் உலரவிடுங்கள். 

ஆலிவ் எண்ணெய் : 

ஆலிவ் எண்ணெய் கொண்டு பருக்களால் ஏற்பட்ட தழும்பு உள்ள பகுதிகளின் மீது தடவி மசாஜ் செய்யுங்கள். இதனை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

கற்றாழை ஜெல் : 

கற்றாழை இலையைக் கீறி உள்ளே உள்ள ஜெல்லை தனியே எடுத்துக் கொள்ளுங்கள். சற்று நேரத்தில் அது சாறு போலாகிவிடும். இதனை முகத்தில் நாள்தோறும் தடவி வாருங்கள். இவற்றால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -