Posted by : Admin Sunday, 12 January 2014

நமது சருமத்தை அழகுப்படுத்தும் குணங்களும் கூட கிளிசரினுக்கு உண்டு. அழகுப்படுத்துவதிலும் சருமப் பராமரிப்பிற்கும் இப்பொருள் பெருமளவு உதவுகிறது. கிளிசரின் நமது தோல் திசுக்களை புதுப்பிக்கவும் உதவுகின்றது. கிளிசரினை நேரடியாக சருமத்தில் தடவலாம் அல்லது வேறு ஏதேனும் பொருளுடன் சேர்க்கையாகவும் தடவலாம்.

* வறண்ட மற்றும் சோர்வான சருமத்தை போக்க வல்லது கிளிசரின். குளிர் காலத்தில் கிளிசரின் சரும பராமரிப்பில் முக்கிய பங்காற்றுகிறது. ஒரு பஞ்சு உருண்டையை எடுத்து அதில் கிளிசரினை நனைத்து சருமத்தில் தடவ வேண்டும்.

அதை போட்ட சில நொடிகளிலேயே சருமம் ஈரப்பதத்துடனும், மென்மையாகவும் காணப்படும். மருத்துவ குணமுள்ள கிளிசரின் சொரசொரப்பான, வறண்ட மற்றும் எரிச்சல் தரும் சருமத்தை குணமாக்க முடியும். இதனால் சருமம் மென்மையாகவும் ஈரப்பதத்துடனும் இருக்கும்.

* தோலில் உள்ள அழுக்கு மற்றும் தூசி ஆகியவற்றை சுத்தம் செய்ய கிளிசரினை பயன்படுத்தலாம். ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் இரண்டையும் கலந்து சுத்தப்படுத்தும் திரவமாக பயன்படுத்தலாம்.

இரவு தூங்கும் முன்பு இந்த கலவையை கொண்டு முகத்தை துடைத்த பின் தூங்கச் செல்லுங்கள். இதை தினந்தோறும் செய்யும் போது சிறந்த வகையில் உங்கள் தோலின் ஓட்டைகளில் இருக்கும் அழுக்குகளை அவை சுத்தப்படுத்தி மென்மையான சருமத்தை தருகின்றன.

* பருக்கள் மற்றும் அதனால் ஏற்படும் கரும்புள்ளிகளை குறைக்கும் சக்தி கிளிசரினுக்கு உள்ளது. உடனடியாக இல்லாவிட்டாலும், தினந்தோறும் இதை பயன்படுத்தும் போது சிறந்த பலனை பார்க்க முடியும். கிளிசரினை புள்ளிகள் மற்றும் பருக்கள் இருக்கும் இடத்தில் பஞ்சு கொண்டு தடவினால் அவைகள் மறைந்து விடும். ஆனால் பருக்கள் வெடித்த நிலையில் இருக்கும் போது அதிகம் பயன்படுத்த வேண்டாம்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -