Posted by : Admin Saturday, 14 July 2012


ஆப்பிள் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்காக தினமும் ஆப்பிளை வாங்கி சாப்பிடுகின்றோம்.
ஆனால் அவ்வாறு ஆப்பிளை சாப்பிட்டால் உடலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகாகவும் மாறும்.

ஏனெனில் இதில் உள்ள ஆன்டி- ஏஜிங் முகத்தில் மற்றும் உடலில் தோன்றும் வயதான சுருக்கங்களை போக்குவதோடு, ஆப்பிள் போன்ற கன்னங்களையும் பெற முடியும்.

1. ஆப்பிளை சாப்பிட்டால் சுருக்கங்கள் உண்டாவதை தடுக்கலாம். ஏனெனில் அதில் உள்ள ஆன்டி- ஏஜிங் பொருள் உடலில் தோன்றும் வயதான சுருக்கங்களை போக்கும்.

மேலும் இறந்த செல்களை நீக்கி, பொலிவான தோற்றத்தை கொடுக்கும். அதிலும் இந்த பேஸ்ட்டை முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் பளிச்சென இருக்கும்.


2. மேலும் இது ஒரு சிறந்த கிளின்சர். இந்த பழத்தில் உள்ள அமிலத்தன்மை, முகத்தில் இருக்கும் தேவைக்கு அதிகமான எண்ணெய் பசையை நீக்கும்.

அத்தகைய ஆப்பிள் கிளின்சரை செய்ய, முதலில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் ஜூஸ், 2 டேபின் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேனை கலந்து, முகத்தில் தடவி 3-4 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் ஆப்பிளின் மகிமை, இதன் முடிவில் நன்றாக தெரியும்.

3. ஆப்பிளை வைத்து மாஸ்க் செய்தால், அதைவிட நன்றாக இருக்கும். ஏனெனில் அப்போது ஆப்பிளில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நேரடியாக உடலில் செல்லும்.

அந்த மாஸ்க் செய்ய, 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் பேஸ்டுடன், 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மீல் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 25-30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் முகமானது அழகாக, புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

4. ஆப்பிளானது பிம்பிள் மற்றும் முகத்தில் இருக்கும் கொப்புளங்கள், புண் போன்றவை நீக்கும். அதற்கு அதனை மாஸ்க் போல் செய்ய வேண்டும். அதற்கு ஆப்பிள் துண்டுகளை, முகத்தில் தேய்க்க வேண்டும். இல்லையென்றால் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் பேஸ்டுடன், 1 டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு பேஸ்ட் சேர்த்து, முகத்தில் தடவ வேண்டும். பிறகு 10-15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகமானது மென்மையாக இருக்கும்.

5. முக்கியமாக ஆப்பிள் ஒரு சிறந்த சன் ஸ்கிரீன் பொருள். இது சூரியனிடமிருந்து வரும் புறஊதாக் கதிர்களால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும். அதற்கு தினமும் குளிக்கும் முன், ஆப்பிள் சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிக்கவும்.

இவ்வாறெல்லாம் செய்தால் முகமானது பளிச்சென்று இருப்பதோடு, பொலிவாக இருக்கும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -