Posted by : Admin
Friday, 9 December 2011
பொதுவாக உடல் ஆரோக்கியதிற்கு காய்கறிகள் மிகவும் அவசியம். நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் விடயங்கள் அடங்கி உள்ளன.
பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி யும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன.
இவை கண்களுக்கு மிகவும் நல்லது. தினமும் ஏதாவது ஒரு வகை கீரையை சேர்த்து கொள்வது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. குறைந்த பட்சம் வாரத்திற்கு இரண்டு முறையாவது கீரை சேர்த்து கொள்ள வேண்டும்.
அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரைக்கீரை, வெந்தயக்கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி2 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
வைட்டமின் ஏ யில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. இது பார்வைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.