Posted by : Admin
Friday, 11 November 2011
உணவில் உப்பு பயன்படுத்துவதைக் குறைத்தால் அது பல்வேறு உடல் பிரச்னைகளை ஏற்படுத்தி இறுதியில் இருதய நோயை ஏற்படுத்தும் என்று மருத்துவ ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பொதுவாக உப்பை அதிகம் உட்கொண்டால் அது உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி மாரடைப்பை உருவாக்கும் என இதுநாள் வரை கருதப்பட்டது.
ஆனால் 40,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட 67 ஆய்வு முடிவின்படி உப்பைக் குறைத்துக் கொள்வோரின் உடலில் 2.5 சதவீதம் கொழுப்பு அதிகரிப்பதாகத் தெரியவந்துள்ளது என்று லண்டனில் வெளியாகும் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழக மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில் உப்பைக் குறைத்தால் ரெனின் என்ற புரதமும், அல்டோஸ்டிரோன் என்ற ஹோர்மோனும் சிறுநீரகத்தில் அதிகளவில் சுரக்கும், அது உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ ஆய்வாளர் நீல்ஸ் கிரெடல் கூறுகையில், உப்பைக் குறைத்தால் அது இருதய நோயை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அதிக உடல் எடை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
எனினும் உப்பைக் குறைப்பதால் இருதய நோய் ஏற்பட வாய்ப்பில்லை என்று பேராசிரியர் கிரஹாம் மெக்கிரிகோர் தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு உணவில் 6 கிராம் அளவு உப்பைச் சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்று இருதய நிபுணர்கள் சங்கத்தின் அறிவியல் ஆலோசகர் கெய்த் பெர்டிணாண்ட் தெரிவித்தார்.
Related Posts :
- Back to Home »
- மருத்துவம் »
- உள்ளெடுக்கப்படும் உப்பின் அளவு குறைந்தால் இதய நோய்கள் ஏற்ப்படும் அபாயம்

