Showing posts with label ஒரு கர்ப்பிணி மரணம்..... Show all posts
ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு கர்ப்பிணி மரணம், அதிர வைக்கும் காரணம்!
Tuesday, 28 June 2016
Posted by Author
Tag :
ஒரு கர்ப்பிணி மரணம்....
உலக சுகாதார அமைப்பு கர்ப்பிணித் தாய்மார்களின் இறப்பு பற்றி பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதில் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு கர்ப்பிணிப் பெண் இறப்பதாக சொல்லப்படுகிறது.
வருடாந்தம் நிகழும் 529,000 கர்ப்பிணி இறப்புகளில் இந்தியாவில் மட்டும் 136,000 (25.7 வீதம்) இறப்புக்கள் நிகழ்கிறது.
உண்மையில் மூன்றில் இரண்டு பங்கு கர்ப்பிணி இறப்புக்கள் குழந்தை பிறந்த பின்னரே நிகழ்கிறது.
குழந்தை பிறப்பின் போது நிகழும் குருதிப் போக்கே அதற்கான காரணம் என சொல்லப்படுகிறது.
பெரும்பாலும் கர்ப்பிணிகள் மேற்கொள்ளும் தவறு யாதெனில், குழந்தை பிறக்கும் தருவாயில் அதாவது கிட்டத்தட்ட 9வது மாதத்தில் உண்டாகும் அபாய அறிகுறிகளை கவனிக்காது விடுவது.
அக்காலங்களில் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.
இவ் அறிகுறிகள் குருதிப்பெருக்கு, கூடுதலான கருப்பை சுரப்பு, வழக்கத்துக்கு மாறான வயிற்று வலி, குறைந்தளவு கரு அசைவு, தலைவலி, பார்வை தடைப்படுதல், கால் வீக்கம் போன்றனவாகும்.
