Showing posts with label அறுவை சிகிச்சை செய்யும் ரோபோ..... Show all posts


அமெரிக்க விஞ்ஞானிகளால் அண்மையில் மென்மையான மனித இழையங்களில் உண்டாகும் காயங்களுக்கு தையல் போடும் ரோபோ ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது முற்றிலும் மனித தலையீடின்றி தன்னிச்சையாக இயங்கக் கூடியது எனவும், அனுபவம் வாய்ந்த வைத்திய நிபுணர்களிலும் வினைத்திறன் கூடியதெனவும் அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியிலிருந்து தெரியவருகிறது.

இதுபற்றி அவர்கள் மேலும் தெரிவிக்கையில், மருத்துவத்துறையின் வினைத்திறனை அதிகரிக்கவும், இலகுபடுத்தவும், வைத்திய நிபுணர்களால் அடையமுடியாத இலக்குகளை அடையவும் இது பெரும் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இக் கண்டுபிடிப்பானது அறுவைச்சிகிச்சை துறையினை விரிபுபடுத்தவே அன்றி வைத்திய நிபுணர்களை பிரதியீடு செய்வதை நோக்கமாகக் கொண்டதல்ல எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல வருடங்களாக பல ரோபோக்கள் அறுவைச்சிகிச்சை துறையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும் அவை வினைத்திறன் குறைந்தவையாக, மென்மையான இழையங்களை அணுக முடியாதவையாகவே இருந்தன.

ஆனால் இந்த ரோபோக்கள் அவற்றை விட பலமடங்கு வினைத்திறன் கூடியதாக, மனித இழைய அசைவினை மிக நுணுக்கமாக அவதானித்து இயங்கக்கூடியதாகவும் உள்ளமை வைத்தியத்துறையில் ஒரு புரட்சியாகவே பார்க்கப்படுகிறது.

வருடாந்தம் மில்லியனுக்கும் அதிகமான அறுவைச்சிகிச்சைகள் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவற்றில் உண்டாகும் தவறுகள் பாரிய அளவில் குறைவடையும் எனவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -